2 நாட்களுக்கு முன்பு 4 இந்தியர்களுடன் சிங்கப்பூரில் இருந்து சென்ற கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
இப்போது சிசல்லஸ் தீவு அருகே இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்த சீன கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
அந்த கப்பலை ரகசிய இடத்துக்கு கடற்கொள்ளையர்கள் கொண்டு சென்றுவிட்டனர். கப்பல் கடத்தப்பட்டது குறித்து அந்த பகுதியில் ரோந்து சுற்றி வரும் கடற்கொள்ளையர் எதிர்ப்பு கூட்டு படைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த கப்பலை தேடிவருகின்றனர்.
கப்பலில் எத்தனை ஊழியர்கள் இருந்தார்கள்? கடற்கொள்ளையர்கள் கோரிக்கை என்ன? என்ற விபரமும் தெரியவில்லை.
இதற்கிடையே கொள்ளையர்கள் கடத்திய சிங்கப்பூர் கப்பலை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்காக கப்பல் நிறுவனம் கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நன்றி
மாலைமலர்
No comments:
Post a Comment